Sunday, June 15, 2014


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
நாள்   : 12 .06.2014                                    
இடம் :  பிச்சையம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மைதானம் .
                                                “ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்ளே இருக்கிறது” என்ற கருத்திற்கிணங்கவும், “குழந்தையின் வருமானம் வீட்டிற்கு அவமானம்” என்ற வாய்மொழிக்கிணங்கவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
                                                குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின பற்றிய கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொள்ள தலைமையாசிரியரால் உரை நிகழ்த்தப்பட்டது.பின்பு ஆசிரியர் பயிற்றுநர் உரை நிகழ்த்தினார். அதில் , சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2001-ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி அபாயகரமான தொழிலில் ஈடுபடும் குழந்தைகளைக் காப்பதற்காக ஒரு சாசனம் இயற்றியது.இந்த நாளே சர்வதேச குழந்தைகள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

                        ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                         எழுமையும் ஏமாப் புடைத்து.             என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்றும் , அனைவரும் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து  தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனவும் வலியுத்தப்பட்டது.
                                                மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் இலவச தொலைப்பேசி எண்ணிணான 1098 என்ற எண்ணினை அறிமுகப்படுத்தி, அருகில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் இருந்தால் தவகல்  தெரிவிக்கலாம் என்று கூறினார்.
                                                பின் குழந்தை தொழிலாளர் தினத்தின் கருத்தினை அறிந்து கொண்ட மாணவர்கள் , எம் பள்ளியின் உதவி ஆசிரியர் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை கூற, மாணவர்களும் பின் தொடர்ந்து கூறி உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.பின் மாணவர்கள்  ஒவ்வொருவராக வகுப்பிற்கு கலைந்து செல்ல குழந்தை தொழிலாளர்  எதிப்பு தின நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Saturday, June 14, 2014


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

            நாள் : 09.06.2014                              நேரம் : மாலை 3.00 மணி
பேரணி தொடங்கிய இடம் :    பிச்சையம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி                                                                                                                   M.காப்பிலியபட்டி.
பங்கு பெற்றோர்                 : தலைமையாசிரியர் , ஆசிரியைகள், மாணவ,மாணவிகள்.
விழிப்புணர்வு பேரணி பற்றிய சாராம்சம் :-
            *உலகின் அறிய வரப்பிரசாதமான நீரைப் பற்றியும் , அவ்வாறு கிடைக்கும் நீரை எவ்வாறு சேகரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி பிச்சையம்மாள் நினைவு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளால் நடத்தப்பட்டது.
            *நுற்றுக்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் வரிசையாக நின்று , மழைநீர்  சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி பற்றிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திக் கொண்டு தமது பள்ளியை சுற்றியுள்ள ஊர்களிலுள்ள தெருக்களின் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மழைநீர் சேமிப்பு பற்றிய கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.
                         *  சேகரிப்போம் ! சேகரிப்போம் !  
                        மழைநீரை சேகரிப்போம் !
                    *  மழையால் ஆவது உலகு
                       அதற்கு மரம் வைத்து பழகு.
                    *  பாலைவனமானாலும் மழைநீர் சேமித்தால்
                       சோலைவனம் ஆகும் .
                   *   வான் தரும் மழை – அதை வீணாக்குவது
                       உன் பிழை.       
                    *  இன்றைய தாகத்துக்கு நீர் தரும் பூமி !
                       நாளைய தேவைக்கு மழைநீரை சேமி !
                    *  மழை நீர் சேமிப்பு , மனைக்கிங்கே அவசியமே !
                   *   காப்போம் ! காப்போம் !
                       மண்வளம் காப்போம் !              போன்ற மழை நீர் சேகரிப்பு பற்றிய வாசகங்கள் பேரணியில் இடம் பெற்றிருந்தன.
                        பின் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரை திரட்டி ஒருங்கே குவித்து சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு , கால்நடைகளுக்கு , நீர்பாசனம் மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம் .சில சூழ்நிலைகளில் மழைநீரை ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய அதிகச் செலவு பிடிக்காத சிக்கனமான நீர் ஆதாரம் .பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒருமரம் வளர்க்க வேண்டும்.

                      தண்ணீரை       

                                    தாத்தா  ஆற்றில் பார்த்தார் !
                                    அப்பா கிணற்றில் பார்த்தார் !
                                    நாம் குழாயில் பார்க்கிறோம் !
             
                             எனவே , இனிவரும் எதிர்காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து , இளைய தலைமுறையாகிய நீங்கள் மரங்களை நட்டு மண்வளம் காத்து மழையைப் பெற்று வளம் பெற வேண்டும் என்ற தலைமையாசிரியரின் உரையுடன் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு பெற்றது.